» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தண்டனையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு: ஹர்திக் பட்டேல் தேர்தலில் போட்டியிட முடியாது!

வெள்ளி 29, மார்ச் 2019 5:52:29 PM (IST)

குஜராத் வன்முறை தொடர்பாக 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யுமாறு ஹர்திக் பட்டேல் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

இதற்கு முன்னரும் பலமுறை இதே கோரிக்கைக்காக பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் ஹர்திக் பட்டேலுக்கு விசாரணை நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

சமீபத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திருமணம் நடந்தது.  குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்துக்கு வந்த  ஹர்திக் பட்டேல், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில்  காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஸ்நகர் மாஜிஸ்திரேட் கோர்ட் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குஜராத் ஐகோர்ட்டில் ஹர்திக் பட்டேல் தனியாக வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை அனுமதிக்க கூடாது என குஜராத் அரசின் சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஹர்திக் பட்டேலின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார்.  இதைதொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஹர்திக் பட்டேல் இந்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை உருவாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory