» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ஊர்மிளா மும்பை வடக்கு தொகுதியில் போட்டி

வெள்ளி 29, மார்ச் 2019 12:44:23 PM (IST)சமீபத்தில் காங்கிரசில் இணைந்த நடிகை ஊர்மிலாவுக்கு மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோங்கர்.  இவர் காங்கிரஸ் கட்சியில் நேற்று முன்தினம் தன்னை இணைத்துக்கொண்டார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அகில இந்திய காங்கிரஸ் ஊடக பிரிவு பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சஞ்சய் நிருபம், மிலின்டா தேரா ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தது பற்றி நடிகை ஊர்மிளா நிருபர்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் பிடித்ததால் என்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டேன். எனக்கு அன்பான வரவேற்பு கொடுத்த தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் தேர்தலுக்காக கட்சியில் இணையவில்லை. தேர்தல் முடிந்த பின்னரும் கட்சியில் இருந்து விலகமாட்டேன்’ என்றார்.

இந்த நிலையில், அக்கட்சியின் பொது செயலாளர் (பொறுப்பு) முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள செய்தியில், நடிகை ஊர்மிளா மடோங்கர் காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்கு தொகுதியில் இருந்து மக்களவை தேர்தலுக்கு போட்டியிடுகிறார்.  இதற்கு கட்சியின் மத்திய தேர்வு குழு ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து

சாமிMar 29, 2019 - 04:53:13 PM | Posted IP 172.6*****

ஹி ஹி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory