» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போட்டி? பிரியங்கா காந்தி கருத்து

வியாழன் 28, மார்ச் 2019 5:34:52 PM (IST)

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துவந்த நிலையில் பிரியங்கா தனது விருப்பத்தைத் தற்போது தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு உத்தரப் பிரதேசப் பகுதிக்கான பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். நீண்ட காலமாக அரசியலிலிருந்து விலகியிருந்த பிரியங்கா, தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார். தனது முதல் மேடைப் பேச்சில் சிறப்பாகச் சொற்பொழிவாற்றிய அவர் இத்தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கட்சி விரும்பினால், தேவை இருந்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

அமேதியில் மார்ச் 27ஆம் தேதி பிரச்சாரத்தின் போது இதுகுறித்து பிரியங்கா காந்தி பேசுகையில், "எனது கட்சி விரும்பினால் கண்டிப்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன். அது நிச்சயம். எனது கட்சிக்காக உழைப்பதே எனது முதல் நோக்கம். கட்சியின் எதிர்காலத்தைச் சிறப்பாக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். கடந்த ஒரு மாதமாகவே வாரணாசியில் நரேந்திர மோடிக்கு எதிராகப் பிரியங்கா காந்தி போட்டியிடவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துவந்த நிலையில் பிரியங்கா தனது விருப்பத்தைத் தற்போது தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் கோவில்களுக்குப் பிரியங்கா சென்று வழிபடுவதை விமர்சனம் செய்த உத்தரப் பிரதேச மாநில முதல்வரும் பாஜகவைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரியங்கா காந்தி இப்பிரச்சாரத்தில் பேசுகையில், ”நான் எப்போது கோவிலுக்குப் போவேன், எந்தக் கோயிலுக்குப் போவேன் என்று அவருக்கு எப்படித் தெரியும்? தேர்தல் இல்லாத நேரங்களில் நான் கோவிலுக்குப் போக மாட்டேன் என்று அவருக்கு 


மக்கள் கருத்து

சாமி அவர்களுக்குMar 30, 2019 - 02:51:21 PM | Posted IP 141.1*****

சாவா கிடைக்கிறார் சாரி சவுக்கித்தார் மோடி பல வேடங்களில் மிஞ்சிடுவார்

உண்மைMar 29, 2019 - 10:05:17 PM | Posted IP 162.1*****

யாரு மோடி போடுறதுதானே ...

சாமிMar 28, 2019 - 07:13:00 PM | Posted IP 172.6*****

தேர்தலுக்காக வேடம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory