» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழ்மையை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி விரட்டுவோம்: ராகுல் அறிவிப்பு

புதன் 27, மார்ச் 2019 11:08:04 AM (IST)

"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சர்ஜிக்கல்  ஸ்டிரைக் நடத்தி ஏழ்மையை நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்’’ என ராஜஸ்தானில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். 

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், 20 சதவீதம் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 குறைந்தபட்ச ஊதிய உறுதி திட்டம் கொண்டு வரப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில், ராஜஸ்தானின் சுரத்கர் பகுதியில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசித்த பின்னரே குறைந்தபட்ச ஊதிய உறுதி திட்டத்தை தயாரித்தோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஏழ்மையின் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை நடத்துவோம். நாட்டிலிருந்து ஏழ்மையை முழுமையாக அகற்றுவோம். இதற்காக கடந்த 6 மாதமாக ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. வரலாற்றில் எந்த நாடும் எடுக்காத முயற்சி இது. இதன் மூலம், நாட்டில் ஏழையாக ஒருவர் கூட இருக்க மாட்டார்.

அதே போல், வேலை வாய்ப்பின்மையை குறைப்பதற்கான நடவடிக்கைகளையும்  மேற்கொள்வோம். மோடி, பணக்காரர்களுக்கு பணத்தை தந்தால், நாங்கள் ஏழைகளுக்கு தருவோம். காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி ஆட்சியில் ஏழ்மையிலிருந்து மீட்கப்பட்டவர்கள் கூட கடந்த 5 ஆண்டில் மீண்டும் ஏழையாகி விட்டனர். சுமார் 14 கோடி மக்களை ஏழ்மையிலிருந்து காங்கிரஸ் மீட்டது. ஆனால், தற்போது நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை மீண்டும் 25 கோடியாக அதிகரித்திருப்பது அவமானத்துக்குரியது. 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை, பிரதமர் மோடி நீர்த்துப் போகச் செய்து விட்டார். வேலை உறுதி திட்டத்தை பற்றி முழுமையாக புரிந்து கொள்வதில் மோடி தோல்வி அடைந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.  


மக்கள் கருத்து

sankarMar 27, 2019 - 04:10:59 PM | Posted IP 172.6*****

விட்டுவிட்டேன் - நீயே வாரிசுதான்

sankarMar 27, 2019 - 04:10:08 PM | Posted IP 172.6*****

காஸ்மீரின் இருந்து கன்யாகுமரி வரை - உன் கூட்டணி லட்சணம் குமட்டுது - காஸ்மீர் உமர் அப்துல்லா வாரிசு - அகிலேஷ் வாரிசு - தேஜஸ்வி வாரிசு - குமாரசாமி வாரிசு - நாயுடு வாரிசு - இங்க சுடலையும் வாரிசு - இத எப்புடி மக்கள் சகித்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறாய் - தமிழகம் அதனை தொகுதியும் உன் கூட்டணி இழக்கும் - எழுதி வைத்துக்கொள்

சாமிMar 27, 2019 - 12:22:23 PM | Posted IP 162.1*****

உங்க பாட்டியும் இதையே தான் சொன்னாங்க - உங்க டாடி - இப்ப நீங்களா - எங்களை பாத்தா அவ்ளோ இளிச்சவாயர்கள் போலவா தெரியுது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory