» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தால் உடனடியாக ஜெயிலுக்கு போவார்: சுப்ரமணியன் சுவாமி

திங்கள் 25, மார்ச் 2019 5:55:53 PM (IST)

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார், ஒருவேளை வந்தால் உடனடியாக ஜெயிலுக்கு போவார் என பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி "பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி பெரும்பான்மையை கைப்பற்றி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்று தான் நம்புவதாக தெரிவித்தார். 5 வருட ஆட்சிக் காலத்தில் பொருளாதார அளவில் பாரதிய ஜனதா அரசு தோல்வியையே சந்தித்துள்ளது. எனினும் பாரதிய ஜனதாவுக்கே செல்வாக்கு உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை பாரதிய ஜனதா தனித்து போட்டியிட வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் காலூன்ற முடியும். கூட்டணி வைத்தால் இயலாது.

அரசியலும், சினிமாவும் ஒன்றில்லை. ரஜினி வர்றார், வர்றார்னு சொல்றாங்க, அவர் எங்கே வர்றார். அடுத்த தேர்தல் வரும் போது, இந்த தேர்தலில் போட்டியில்லை அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன்னு சொல்வார். இது அவருக்கு பழக்கமாகிவிட்டது. அப்போது என்ன சொன்னார் என்று எனக்கு தெரியும். வந்துவிட்டார், வர்றார், பொதுக்கூட்டம் நடத்துகிறார், அமைப்பு ஆரம்பிக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர் வரமாட்டார் என்று நான் அப்போவே சொன்னேன், அதற்கான காரணம் எனக்கு தெரியும். ரஜினி எப்பவுமே அரசியலுக்கு வரமாட்டார். வரமுடியாது. ஒருவேளை வந்தார்னா அவர் உடனடியாக ஜெயிலுக்கு போவார். இவ்வாறு கூறினார்.


மக்கள் கருத்து

இவன்Mar 26, 2019 - 12:14:03 PM | Posted IP 162.1*****

நாட்டுக்கு விரட்ட வேண்டியவை 2 கொசுக்கள்

தமிழன்Mar 26, 2019 - 04:01:11 AM | Posted IP 108.1*****

இந்த கொசு தொல்லை தாங்க முடியிலே.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory