» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வறுமையை ஒழிக்க ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் : ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி!!

திங்கள் 25, மார்ச் 2019 5:23:19 PM (IST)

நாட்டில் ஏழ்மை நிலையில் இருக்கும்  20 சதவீதம் ஏழைக் குடும்பங்களை  வறுமையில் இருந்து மீட்டெடுக்க  ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக அளித்தார்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக ஆலோசிக்கவும், அந்த அறிக்கையை இறுதி செய்யவும் செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மல்லிகார்ஜூன கார்கே, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்று விவாதித்தனர்.

அதன்பின் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டில் உள்ள 20 சதவீதம் ஏழை குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க விரும்புகிறோம். 5 கோடி குடும்பங்கள், 25 கோடி மக்கள் நேரடியாக குறைந்தபட்ச வருமானத் திட்டத்தின் கீழ் பயன் பெறப்போகிறார்கள். ஏழை மக்கள் நலனுக்காக குறைந்தபட்ச வருமானத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்துவிட்டோம். அதற்கான அனைத்து கணக்கீடுகளயும் முடித்து விட்டோம். இதன்படி நாட்டில்  உள்ள 5 கோடி ஏழைக் குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 

இந்த திட்டத்தின் கீழ் 25 கோடி மக்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள். ஏழ்மையின் மீதான கடைசிகட்ட தாக்குதல் தொடங்கி இருக்கிறது. இந்த தேசத்தில் இருந்து வறுமையை நாங்கள் ஒழிப்போம். உலகிலேயே இந்த திட்டம்  போன்று வேறு எந்த திட்டமும் இல்லை. இந்த திட்டம் வலிமையானது,மிகவும் சிந்தித்து, நிதானமாக எடுக்கப்பட்ட முடிவு.இந்த திட்டம் தொடர்பாக ஏராளமான பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசித்து, கலந்தாய்வு செய்து அவர்களின் ஆலோசனைக்குப் பின் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5ஆண்டுகளாக மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள், அவர்களுக்கு நாங்கள் நீதி வழங்க விரும்புகிறோம்.  இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.


மக்கள் கருத்து

JoseMar 27, 2019 - 04:29:40 PM | Posted IP 172.6*****

Chowkidar இதுவரைக்கும் எண்ணத்தை உருப்படியாக செய்தார் சாமி அவர்களே...

சாமிMar 27, 2019 - 09:41:56 AM | Posted IP 162.1*****

இதுவரைக்கும் புடுங்கின ஆணியே போதும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory