» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயரில் இருந்து காங்கிரஸ் நீக்கம்: மம்தா அதிரடி நடவடிக்கை

சனி 23, மார்ச் 2019 3:28:33 PM (IST)திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயரில் இருந்து   21 ஆண்டுகள் கழிந்து காங்கிரஸ் என்ற வார்த்தையையும் மம்தா பானர்ஜி நீக்கியுள்ளார் 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் மற்றும் முகநூல் ஆகியவற்றிலும் காங்கிரஸ் சொல் நீக்கப்பட்டிருக்கிறது.. கட்சி கூட்டங்களில் பேரணிகளில் கட்டப்படும் பதாகைகளில் இருந்தும் காங்கிரஸ் என்ற சொல் நீக்கப்பட்டது. 1998ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து மம்தா பானர்ஜி வெளியேறினார். அப்பொழுது திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரை தனது புதிய அமைப்புக்கு மம்தா பானர்ஜி சூட்டினார். இப்பொழுது 21 ஆண்டுகள் கழிந்து தனது கட்சியின் பெயரில் இறுதியில் உள்ள காங்கிரஸ் என்ற வார்த்தையையும் மம்தா பானர்ஜி நீக்கியுள்ளார் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகளில் எல்லாம் திரிணாமுல் என்ற பெயர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது .

திரிணாமுல் கட்சிக்கான திரிணாமுல் என்ற பெயர் மட்டும் கொண்ட புதிய லோகோ தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய லோகோவில் பின்னணி வண்ணம் ஊதாவாக உள்ளது. அதில் 2 பூக்கள் இருக்கும் திரிணாமுல் என்ற பெயர் பச்சை வண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த புதிய லோகோ கடந்த 1 வார காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.தேர்தல் கமிஷன் பதிவுகளில் இன்னும் திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயர்தான் பயன்படுத்தப்படுகிறது. அதை மாற்றக்கோரி இன்னும் விண்ணப்பம் அனுப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தகுந்தது.


மக்கள் கருத்து

உண்மைMar 24, 2019 - 12:13:52 PM | Posted IP 172.6*****

காங்கிரஸ் என்பதன் அர்த்தம் தெரியுமா..

sankarMar 23, 2019 - 03:57:24 PM | Posted IP 162.1*****

இதுக்கு பப்புதான் பதில் சொல்லவேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory