» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு: பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு வெற்றி

புதன் 20, மார்ச் 2019 4:21:01 PM (IST)கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.

கோவா முதலமைச்சராக இருந்‌த மனோகர் பாரிக்கர் மறைந்‌த நிலையில், புதிய முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர். தனிப்பெரும் கட்சியாக உள்ள‌ தங்களையே ஆ‌ட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டுமென காங்கிரஸ் கேட்டுக்கொ‌ண்டிருந்தது. அதேசமயம் காலம் கடத்தாமல் விரைந்து பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் பாஜகவும் விரும்பியது.

இதனையடுத்து பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு ஆளுநரை முதலமைச்சர் சாவந்த் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டிருந்தார். அதனை ஏற்றுக் கொண்டு, முதல்வர் பிரமோத் சாவந்த் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் மிருதுளா சின்ஹா உத்தரவிட்டார். இதற்காக பேரவையின் சிறப்பு கூட்ட‌ம் இன்று காலை 11.30 மணியளவில் கூடியது. அப்போது முதலமைச்சர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 19 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையான நிலையில், 20 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் வெற்றி பெற்றார். முதலமைச்சர் பிரமோத் சாவந்திற்கு எதிராக 15 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory