» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி: மீண்டும் மோடி பிரதமர் - டைம்ஸ் நவ் கணிப்பு!

செவ்வாய் 19, மார்ச் 2019 5:46:22 PM (IST)

மோடி மீண்டும் பிரதமர் ஆவார். ஆனால், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அதிகத் தொகுதிகளை வெல்லும் என்று டைம்ஸ் நவ் ஊடகம் கணித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி 34 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் சர்வே இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதோடு 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடக்கிறது. இதில், அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஓரணியிலும், திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் ஓரணியிலும் நிற்கின்றன.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுவரும் நிலையில் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நேற்று (மார்ச் 18), டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் சர்வே நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி 282 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 136 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் 125 தொகுதிகளையும் வெல்லும் என இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜக தலைமையிலான அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் என்பது இந்த கருத்துக் கணிப்பின் முடிவாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி மெகா வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் கணித்துள்ளது


மக்கள் கருத்து

உண்மைMar 20, 2019 - 05:17:12 AM | Posted IP 162.1*****

பணம் வாங்கி கொண்டு போடும் சர்வே .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory