» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காவலன் நரேந்திர மோடி: டுவிட்டரில் பெயர்களை மாற்றிய பாஜக தலைவர்கள்

ஞாயிறு 17, மார்ச் 2019 7:54:50 PM (IST)

யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி டுவிட்டரில் தனது பெயரை காவலன் நரேந்திர மோடி மாற்றியுள்ளார். இதையடுத்து பாஜக தலைவர்கள் பலரும் தங்கள் பெயரில் மாற்றம் செய்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். காவலாளி ஒரு திருடன் என்று விமர்சித்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நானும் காவலன்தான் என்கிற புதிய பிரச்சார வீடியோவை வெளியிட்டார்.

மேலும் அந்த பதிவில்,”உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலாளிதான் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று டுவிட்டரில் தனது பெயரை மாற்றியுள்ளார். ”காவலன் நரேந்திர மோடி” என்று மாற்றம் செய்துள்ளார்.

இதேபோல் பாஜக தலைவர் அமித் ஷா தனது டுவிட்டர் கணக்கில் பெயரை காவலன் அமித்ஷா என்று மாற்றியுள்ளார். மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா, பியூஷ் கோயல், ஹர்ஷவர்தன், தர்மேந்திர பிரதான், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் டுவிட்டரில் தங்கள் பெயருக்கு முன் காவலாளி என்று மாற்றியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory