» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மருமகளுக்கு சீட் இல்லை என்றால் பிரசாரம் செய்ய மாட்டேன் : அகிலேஷை மிரட்டிய முலாயம்

ஞாயிறு 17, மார்ச் 2019 7:44:12 PM (IST)

மருமகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால் பிரசாரம் செய்ய மாட்டேன் என அகிலேஷ் யாதவை முலாயம் சிங் யாதவ் மிரட்டியுள்ளார்.

முலாயம் சிங்கின் இளைய மகன் பிரத்தீக் சிங் யாதவ் மனைவி அபர்ணா பிஷ்த் யாதவ்(29) 2017 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இப்போது அவர் சமாஜ்வாடி கட்சியின் தரப்பில் சம்பல் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியது. இதுதொடர்பாக முலாயம் சிங் யாதவ்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அபர்ணா கூறிவிட்டார். கட்சி இப்போது அகிலேஷ் யாதவ் வசம் உள்ளது.

அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் ஏற்கனவே இரண்டு முறை எம்.பி.யாக இருந்துள்ளார். இப்போது மூன்றாவது முறையாக கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுகிறார். இப்போதைய தேர்தலில் முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார்கள். குடும்ப உறுப்பினர்களே அதிக தொகுதியில் களமிறங்குகிறர்கள் என விமர்சனம் எழுகிறது. இந்நிலையில் அபர்ணா யாதவிற்கும் சீட் வேண்டும் என்று அகிலேஷ் யாதவிடம், முலாயம் சிங் வலியுறுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

மருமகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால் பிரசாரம் செய்ய மாட்டேன் எனவும் மிரட்டியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 2017 தேர்தலில் குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே சமாஜ்வாடி, பா.ஜனதாவிடம் ஆட்சியை இழந்தது. முலாயம் சிங் யாதவ் பிரசாரம் செய்யவில்லை என்றால் வெற்றியில் பாதிப்பு நேரிடலாம் என கணிக்கப்படுகிறது. எனவே அபர்ணாவிற்கு சீட் கொடுப்பது தொடர்பாக அகிலேஷ் யோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு நகர்வை பா.ஜனதா உன்னிப்பாக கவனிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory