» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் விளையாடிய கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேர் குஜராத்தில் கைது

சனி 16, மார்ச் 2019 11:19:58 AM (IST)

குஜராத்தில் தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் விளையாடியதாக 6 கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செல்போனில் பப்ஜி என்ற வீடியோ கேம் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பிரபலமாக உள்ளது. இந்த விளையாட்டுக்கு, மாணவ, மாணவிகள் அடிமையாவதால் இதைத் தடை செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் பப்ஜி, மோமோ சேலஞ்ச் ஆகிய செல்போன் ஆன்-லைன் கேம்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ராஜ்கோட் நகர காவல் துறை ஆணையர் மனோஜ் அகர்வால் கடந்த 6-ம் தேதி உத்தரவிட்டார். இதுதொடர்பான உத்தரவு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் ராஜ்கோட் நகரில் அந்த கேம்களை ஆன்-லைனில் விளையாடியதாக 6 கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுக்கப்பட்டனர். இந்த வகை கேம்கள் மாணவர்களின் படிப்பை பாதிப்பதோடு, ஒட்டுமொத்த நடவடிக்கையையும் கெடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற கேம்களை விளையாடக்கூடாது என்று அகமதாபாத் நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.சிங் 2 நாட்களுக்கு முன்பு உத்தரவைப் பிறப்பித்தார்.

தடை செய்ய கோரிக்கைஇந்த ஆன்-லைன் விளையாட்டை குஜராத் முழுவதும் தடை செய்யக் கோரி, மாநில அரசுக்கு, குஜராத் மாநில குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தவிர இந்த விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு 33 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு குஜராத் மாநில கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory