» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாராளுமன்ற தேர்தலுக்காக 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயார்: இதுவரை ரூ.66 கோடி செலவு!!

வியாழன் 14, மார்ச் 2019 3:54:42 PM (IST)

பாராளுமன்ற தேர்தலில் முதல்கட்டம் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்கு தேவையான 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் தேர்தலின்போது ஓட்டுப்பதிவு அன்று வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை வைக்கப்படுவது வழக்கம். இது காலம்காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த அழியாத மை தயாரிக்கும் அரசு தொழிற்சாலை கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ளது. 

நாடு முழுவதும் 543 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுதேர்தலுக்காக 10 மில்லி லிட்டர் அளவில் 26 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்க இந்த நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி மாதம் தேர்தல் கமிஷனிடம் இருந்து உத்தரவு வந்தது. உடனடியாக அழியாத மை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. இதற்காக இதுவரை ரூ.66 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டம் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்கு தேவையான 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory