» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்தார்

வியாழன் 14, மார்ச் 2019 3:19:29 PM (IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் முக்கிய உதவியாளராக இருப்பவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாம் வடக்கன் பாஜகவில் இன்று இணைந்தார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவி சங்கர்பிரசாத் முன்னிலையில், இன்று பாஜகவில் முறைப்படி டாம் வடக்கன் இணைந்தார். 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த டாம் வடக்கன் நேரடி தேர்தல் அரசியலில் இதுவரை ஈடுபடாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவாக இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் பாஜகவில் இணைந்தது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

பாஜகவில் இணைந்தது குறித்து டாம் வடக்கன் கூறுகையில், "புல்வாமா தாக்குதலுக்கு  பதிலடியாக பாலகோட்டில் நமது விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆதாரங்களை ஒரு அரசியல் கட்சி கேட்பது என்பது தேசத்துக்கு எதிரானது. அதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து கனத்த இயத்தோடு விலகினேன். வேறு எந்த வாய்ப்பும் எனக்கு இல்லை. பிரதமர் மோடியின் வளர்ச்சிப் பாதையும், திட்டங்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "டாம் வடக்கன் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய தூணாக முக்கிய கட்டங்களில் இருந்தார். வாரிசு அரசியல் அங்கு நடக்கிறது, ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கலாச்சாரம் நிலவுகிறது, சுயமரியாதைக்கு அங்குஇடமில்லை " எனத் தெரிவித்தார். இதற்கிடையே டாம் வடக்கன், தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கேட்டுள்ளநிலையில், அதை வழங்குவதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory