» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வாக்குப்பதிவில் சாதனை படைக்க ஊக்கம் கொடுங்கள்: பிரதமரின் வேண்டுகோளை ஏற்ற ரஹ்மான்

புதன் 13, மார்ச் 2019 4:01:19 PM (IST)

மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும்படி அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதையடுத்து, பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றும்படி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 
 
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவில் உலக சாதனை படைக்கவேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். வாக்குப்பதிவை அதிகரிக்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட துறைகளின் முக்கிய பிரபலங்களின் டுவிட்டரை டேக் செய்த மோடி, வாக்குப்பதிவை அதிகரிக்க மக்களுக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்படி கூறியிருந்தார். பிரதமரின் வேண்டுகோளை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்றுக்கொண்டு, டுவிட்டரில் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory