» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்களுக்குத் தேவை காந்தியின் இந்தியாவா? கோட்சேவின் இந்தியாவா? ராகுல் காந்தி பேச்சு

செவ்வாய் 12, மார்ச் 2019 12:45:40 PM (IST)

மக்களவை தேர்தலில் மகாத்மா காந்தியடிகளின் இந்தியா மற்றும் கோட்சேவின் இந்தியா இடையே நடைபெறும் போட்டியில் மக்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். காந்தியடிகளின் இந்தியா அன்பு நிறைந்தது. கோட்சேவின் இந்தியா வெறுப்பு நிறைந்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

புதுடில்லியில் தொண்டர்கள் மத்தியில் இன்று உரையாற்றிய ராகுல் காந்தி பாஜக மற்றும் பிரத்மர் நரேந்திர மோடியை கடுமையாக சாடி பேசினார். அதன் விவரம் : மகாத்மா காந்தி பயமின்றி தைரியமாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார். அதற்காக பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். இருப்பினும் அவர் ஆங்கிலேயர்களுடன் பேசும் போது அன்புடன் பேசினார். ஆனால் வீர சர்வார்கரோ ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதினார்.

மகாத்மா காந்தியடிகளின் அன்பு நிறைந்த இந்தியாவா அல்லது கோட்சேவின் வெறுப்பு நிறைந்த இந்தியாவா? வரும் மக்களவை தேர்தலில் இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பாஜக தான் காரணம்.முன்பு பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்த போது பயங்கரவாதி மசூத் அசாரை விடுவித்தது. தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவல் அன்று மசூத் அசாருடன் விமானத்தில் சென்று அவரை காந்தஹாரில் ஒப்படைத்தார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 முன்னாள் பிரதமர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் காங்கிரஸ் எப்போதும் யாருக்காகவும் தலைவணங்கியதில்லை. பிரதமர் நரேந்திர மோடி ஊழலை ஒழிப்பேன் எனக் கூறி ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் ஆட்சியில் போடப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளன. மேக் இன் இந்தியாவை பற்றி மோடி பெருமையாக பேசி வருகிறார். ஆனால் அவர் அணிந்துள்ள சட்டை, ஷூ, போன் ஆகியவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை.

மோடியின் பலவீனத்தை நன்கு உணர்ந்ததால் தான் சீனா டோக்லாம் பகுதிக்கு படைகளை அனுப்பியது. மோடியும் தலைவணங்கி சீனாவிடம் அமைதி உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டார். யாராவது அவரை எதிர்த்து நின்றால் உடனடியாக மோடி பின்வாங்கிவிடுவார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து ஏழை மக்களுக்கும் குறைந்தபட்ச வருவாய் உறுதி செய்யப்படும். காங்கிரஸின் இந்த அறிவிப்பை கேட்டு அரண்டு போன பாஜக அடுத்த நாளே விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு 3.5 ரூபாய் அளிப்பதாக அறிவித்தது.மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 2 நாட்களில் தேர்தல் வாக்குறுதிப்படி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்று ராகுல் காந்தி கூறினார்.


மக்கள் கருத்து

தமிழன்-Mar 14, 2019 - 06:38:18 PM | Posted IP 172.6*****

காங்கிரஸ் தான் வேணும். இந்திய விடுதலைக்கு போராடாத பாசிச பாஜக தேவை இல்லை. இந்தியாவின் இறையாண்மை காப்பாற்றப்படவேண்டும்.

சாமிMar 12, 2019 - 06:55:20 PM | Posted IP 172.6*****

காங்கிரஸ் தேவை இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory