» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தவிர்க்க முடியாது: எஸ்.எம்.கிருஷ்ணா உறுதி

செவ்வாய் 12, மார்ச் 2019 11:23:10 AM (IST)

மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தவிர்க்க முடியாது என  கர்நாடக மாநில முன்னாள் முதல்-அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். 

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மோடி மீண்டும் பிரதமராவது தவிர்க்க முடியாது. ஏனென்றால் நான் கொள்கையில் நம்பிக்கை கொண்டவன். இதன் காரணமாக நான் அதிக தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வேன். பா.ஜனதா வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வேன்.

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நாங்கள் அனைவரும் முடிந்தவரை எங்களின் முயற்சிகளை மேற்கொள்வோம். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பெங்களூருவின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை செய்தேன். இதை நகர மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.தேவேகவுடா, பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடுவதால் பா.ஜனதாவின் வெற்றியை பாதிக்காது. தனிப்பட்ட நபரை விட, கொள்கையே முக்கியமானது. 

ஆனால் அதற்கு பிரதமர் மோடி அப்பாற்பட்டவர். பா.ஜனதாவின் கொள்கையை அடிப்படையாக வைத்து நாங்கள் பிரசாரம் செய்வோம்.யார் நல்ல முறையில் பணியாற்றுகிறார்கள் என்பது பெங்களூரு மக்களின் மனதில் இருக்கிறது. பெங்களூருவில் உள்ள மூன்று தொகுதிகளிலும் பா.ஜனதா பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது. இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். 


மக்கள் கருத்து

இவன்Mar 14, 2019 - 02:25:44 PM | Posted IP 162.1*****

நாட்டில் பிஜேபி காரன் பூரா பைத்தியம்

சாமிMar 12, 2019 - 06:53:28 PM | Posted IP 172.6*****

சீ சீ சீ - மோடி வெற்றி இந்தியாவுக்கே முக்கியம்

ccccMar 12, 2019 - 04:04:09 PM | Posted IP 162.1*****

ஏங்க பெருசு, போகுற காலத்துல அவர்கள் எந்த பதவியையும் தரப்போறது இல்ல. பின்ன ஏன் உளறுறீர்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory