» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எத்தியோப்பியா விமான விபத்தில் பலி: இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவ சுஷ்மா உறுதி!!

திங்கள் 11, மார்ச் 2019 5:48:33 PM (IST)

எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்"என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்திருந்தார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியா. இந்த நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம்  149 பயணிகள், 8 ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி 8.38 மணிக்கு அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. நகரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பிஷோப்டு பகுதியில்  விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியானார்கள்

இந்த விமான விபத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 157 பேரும் உயிரிழந்தனர். இதில் 4 இந்தியர்களும் பலியானார்கள். பலியான இந்தியர்களில் ஷிகா கார்க் எனும் பெண் மத்திய சுற்றுச்சூழல் மற்றும்வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் பிரிதிநிதியாக நைரோபியில் நடக்கும் ஐநா சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்கச் சென்றார். அப்போது இவர் விபத்தில் சிக்கினார். மேலும், ஷிகா கார்க் தவிர்த்து, வைத்தியா பன்னாகேஷ் பாஸ்கர், வைத்யா ஹசின் அன்னாகேஷ், நுகவரபு மணிஷா ஆகிய இந்தியர்களும் பலியானார்கள் என்று எத்தியோப்பியாவில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்தது. 

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் இன்று வெளியிட்ட பதிவில், "எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்"என உறுதியளித்திருந்தார். மற்றொரு ட்விட்டரில் சுஷ்மா கூறுகையில், "வைத்யா குடும்பத்தார் கனடாவின் டொரான்டோ நகரிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டார்கள். அவர்களின் குடும்பத்தில் 6 பேர் விமான விபத்தில் இதற்கு முன் பலியாகியுள்ளனர் எனும் செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். எத்தியோப்பியா, கென்யாவில் உள்ள இந்தியத் தூதரகங்கள் உடனடியாக உங்களைத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை அளிப்பார்கள் உங்கள் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்குவார்கள்.

என். மணிஷாவின் உறவினருக்கு தேவையான உதவிகளை வழங்கு மாறு நைரோபியில் உள்ள இந்தியத் துணைத்தூதர் ராகுல் சாப்ராவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது "எனத் தெரிவித்திருந்தார். அதேசமயம், இந்திய அதிகாரி ஷிகா கார்க் குடும்பத்தினரை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சுஷ்மா தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில், "விமான விபத்தில் துரதிர்ஷ்டமாக உயிரிழந்த ஷிகா கார்க் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன். அவர் கணவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டும் முடியவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள யாரேனும் உதவுங்கள் "என கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory