» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இரட்டை இலை சின்னம் தொடர்பான டிடிவி தினகரன் மேல்முறையீடு வழக்கு: 15ஆம் தேதி விசாரணை

திங்கள் 11, மார்ச் 2019 5:15:16 PM (IST)

இரட்டை இலை சின்னம் தொடர்பான  டிடிவி தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை மார்ச் 15 ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றம்  ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்குத்தான் இரட்டை இலை சொந்தம் என்று தீர்ப்பளித்து டிடிவி தினகரன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை மார்ச் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory