» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை விவகாரத்தை பிரசாரம் செய்யக்கூடாது: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

திங்கள் 11, மார்ச் 2019 3:41:50 PM (IST)

சபரிமலை விவகாரத்தை பிரசாரம் செய்யக்கூடாது என கேரள தேர்தல் தலைமை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கேரள மாநில தேர்தல் ஆணையர் டீகா ராம் மீனா, அரசியல் கட்சிகளுடனான கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தக்கூடாது. 

இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. மதம், சாதி உள்ளிட்டவை குறித்து தேர்தல் பிரசாரத்தில் பேசுவது, சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விமர்சிப்பது உள்ளிட்டவை தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றார். மக்களவைத் தேர்தல் கேரளாவில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory