» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகம், புதுச்சேரியில் ஏப்.18-ல் தேர்தல்: ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்

ஞாயிறு 10, மார்ச் 2019 7:14:44 PM (IST)

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஏப்ரல் 18-ம் தேதி 40 தொகுதிகளிலும் மக்களவை தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து இந்தியா முழுவதும் 17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார். இதன்படி தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஏப்ரல் 18-ம் தேதி 40 தொகுதிகளிலும் மக்களவை தேர்தல் நடைபெறும் எனவும், நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழ்நாட்டின் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

முன்னதாக, தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் நடவடிக்கை குறித்து உரையாற்றினார். தேர்தல் நடைமுறை நாடுமுழுவதும் உடனடியாக அமலுக்கு வந்தன. 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது..தேர்தலை நியாயமாக நடத்துவதை உறுதி செய்வதே ஆணையத்தின் குறிக்கோள். மக்களவை தேர்தலுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

2019 மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 90 கோடி வாக்களர்கள் வாக்களிக்க உள்ளனர். 18 முதல் 19 வயது வரை 1.50 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு முறை பயன்படுத்தப்படும் அனைத்து மாநிலத் தேர்தல் அதிகாரிகளோடும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்துக் கட்டத்திலும் தேர்தல் பார்வையாளர்கள் உடனிருப்பார்கள். தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆன்ட்ராய்டு ஆப் மூலம் உடனுக்குடன் தெரியப்படுத்தலாம். வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகள் தனி ஆப் மூலம் செய்யப்பட்டுள்ளது. தேர்தலை அமைதியாக நடத்த மத்திய ரிசர்வ் போலீஸ் தயாராக உள்ளனர்.

மக்களவை தேர்தல் நாள்
 • முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி 20 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும்
 • 2ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி 13 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும்
 • 3ஆம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 23 -ம் தேதி 14 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும்
 • 4ஆம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி 9 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும்
 • 5ஆம் கட்டத் தேர்தல் மே 6-ம் தேதி 7 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும்
 • 6ஆம் கட்டத் தேர்தல் மே 12ம் தேதி 7 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும்
 • 7ஆம் கட்டத் தேர்தல் மே 19ம் தேதி 8 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும்
வேட்பு மனு தாக்கல் 
 • மார்ச் 18ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் 
 • மார்ச் 26ம் தேதி வேட்பு மனு தாக்கல் முடியும்
 • வேட்பு மனு பரிசீலனை கடைசி தேதி மார்ச் 27
 • வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி தேதி மார்ச் 29
வாக்குப் பதிவு ஏப்ரல் 18ம் தேதி
 • வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறும்
இடைத்தேர்தல்

இரண்டாம் கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவையின் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்துள்ளார். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இந்த அறிவிப்பு இன்று மாலை வெளியானது. இந்த அறிவிப்பின் போது ஆணையர்கள் சுசில் சந்திரா, அசோக் லவாசா ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory