» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தான பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடர வேண்டும் : சிவசேனா

வியாழன் 28, பிப்ரவரி 2019 4:21:51 PM (IST)

இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தான பாகிஸ்தான் மீதான தாக்குதலை இந்தியா தொடர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது. 

ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தான பாகிஸ்தான் மீதான தாக்குதலை இந்தியா தொடர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: உலக வரைபடத்தில் பாகிஸ்தான் துடைத்தெறியப்படும் வரை உலகம் முழுவதும் அமைதி என்பது இருக்காது. பாகிஸ்தான் போன்ற நாடு இந்தியாவுக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஆபத்தானது. 

அங்கு தொடரும் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் வரை, நமது நாட்டு ராணுவ வீரர்களின் நடவடிக்கையும் தொடர வேண்டும். பாகிஸ்தானின் மண்ணில் அல் கொய்தா தலைவரான ஒசாமா பின் லேடனை அமெரிக்கா சுட்டுக்கொன்றது. அதே பாணியில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் ஆசார் அழித்தொழிக்கப்பட வேண்டும். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1971-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் வலிமையை உலகத்துக்கு பறைசாற்றினார். பிரதமர் மோடி ஆட்சியில் இதேபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory