» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கியது சரியே : டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 28, பிப்ரவரி 2019 3:15:03 PM (IST)

இரட்டை இலைச் சின்னம் இபிஎஸ்-ஓபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரிதான் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிக்கு அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-இல் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்கரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட  நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்களை  ஒரு வாரத்துக்குள் சமர்பிக்க உத்தரவிட்டதுடன்,  வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்கரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிற்பகல் 2.25 மணிக்கு தீர்ப்பு வழங்கினர்.

இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையிலான அதிமுக அணிக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கி  தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory