» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாகிஸ்தானில் பிடிபட்டுள்ள விமானி அபிநந்தனை மீட்க ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை

வியாழன் 28, பிப்ரவரி 2019 2:10:29 PM (IST)

பாகிஸ்தான் சிறைப் பிடித்து வைத்திருக்கும் இந்திய போர் விமான விமானி அபிநந்தனை மீட்க ராஜாங்க ரீதியான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

புல்வாமா தக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, இந்தியா பிப்ரவரி 26ம் தேதி பயங்கரவாதிகளின் முகாம்களை விமானப்படை மூலம் அழித்துக்கட்டியது. அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் எப் 16 ரக விமானத்தை இந்திய விமானம் சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில் மிக் 21 ரக விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. இதில் விமானியாக செயல்பட்ட சென்னையை சேர்ந்த அபிநந்தனை பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ளது. பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய விமானப் படை விமனியை பத்திரமாக விடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தல். பாகிஸ்தான் துணை தூதரை நேரில் அழைத்து, இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. 

ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி, இந்திய விமானி பற்றிய தகவல்களை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளது. விமானப்படை விமானியை துன்புறுத்தக் கூடாது. விமானப் படை வீரருக்கு எந்த ஆபத்தும் நேரிடாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்தியா விமானப் படை வீரரை பாகிஸ்தான் உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்திய விமானி குறித்த காட்சியை வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory