» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காயமடைந்த வீரரின் படம் விதிகளை மீறி வெளியீடு : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

புதன் 27, பிப்ரவரி 2019 8:54:01 PM (IST)

காயமடைந்த இந்திய வீரரின் புகைப்படத்தை வெளியிட்டு ஜெனிவா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது என்று மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப் படை நேற்று பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானப்படை இன்று இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.அதனால், இந்திய பாகிஸ்தான் எல்லைகளில் பதட்டமான சூழல் நிலவுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் அபிநந்தன், பாகிஸ்தான், ராணுவத்திடம் சிக்கியுள்ளார். அவரை உடனடியாக மீட்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துவருகிறது. இந்தநிலையில், இந்திய வீரரிடம் அமைதியான முறையில் விசாரணை நடத்தும் வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணைத் தூதருக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணைக்கு ஆஜரான அவருக்கு இந்தியா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய அரசு வெளியிட்ட கண்டன அறிக்கையில், பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியிலுள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாமில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. துரதிருஷ்டவிதமாக இரு நாட்டு ஒப்பந்தத்தை மீறி எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

ஆனால், தீவிரவாத அமைப்பு மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிராக பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளது. தேசப் பாதுகாப்பு, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தின் மூலம் ஆபத்து வரும்போது அதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது என்பதை ஏற்கெனவே தெளிவாகக் கூறியுள்ளோம். 

மேலும், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தந்தை மீறி காயமடைந்த இந்திய விமானப் படை வீரரின் புகைப்படத்தை வெளியிட்டதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறோம். பாகிஸ்தான் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக உடனடியாக கடும் நடவடிக்கை வேண்டும் என்பதை இந்தியா எதிர்பார்ப்பதாகவும் அந்நாட்டிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory