» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போர் பதற்றம் எதிரொலி: டெல்லிக்கு வடக்கே வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்கத் தடை!

புதன் 27, பிப்ரவரி 2019 5:24:29 PM (IST)

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் டெல்லி மற்றும் டெல்லிக்கு வடக்கே உள்ள அனைத்து வான் பகுதியிலும் பயணிகள் விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், பயணிகளின் பாதுகாப்புக்காகவும், டெல்லிக்கு வடக்கே வான் பகுதி முழுவதும் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிப்பதால், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. உத்தரகாண்டின் டேஹ்ராடூன் உள்ளிட்ட விமான நிலையங்களிலும் முற்றிலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

எந்த சூழ்நிலையையும் கையாள வான்பகுதி தயார் நிலையில் வைக்கும் பொருட்டு, இந்தியாவின் தலைநகர் டெல்லிக்குக் கிழக்கே உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory