» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிரவ் மோடியின் ரூ.147 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதன் 27, பிப்ரவரி 2019 11:26:16 AM (IST)

மும்பை மற்றும் சூரத்தில் உள்ள நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது.

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவர் மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் மும்பை மற்றும் சூரத்தில் உள்ள நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது. இதில் கட்டிடங்கள், 8 கார்கள், நகைகள், ஓவியங்களும் அடங்கும். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory