» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கு பாக். வழங்கிய உரிமையே புல்வாமா தாக்குதலுக்கு காரணம்: சுஷ்மா

புதன் 27, பிப்ரவரி 2019 10:21:57 AM (IST)

பாகிஸ்தான் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கு வழங்கிய பாதுகாப்பின் முடிவே புல்வாமா தீவிரவாத தாக்குதல் என சுஷ்மா சுவராஜ் கூறினார்.

காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த 14ந்தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது.  இதில் 350 தீவிரவாதிகள் பலியாகினர். இந்த நிலையில், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வெளியுறவு துறை மட்டத்திலான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சீனாவுக்கு சென்றுள்ளார்.  அவரை சீன வெளியுறவு துறை மந்திரி வாங் யீ வரவேற்றார்.  

இந்த பயணத்தில் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெளியுறவு துறை மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதன் ஒரு பகுதியாக வாங்கை சந்தித்து சுவராஜ் இன்று பேசினார்.  இதனை தொடர்ந்து பேசிய சுவராஜ், இந்தியாவில் வருத்தமும், கோபமும் ஏற்பட்டுள்ள நிலையில் நான் சீனாவுக்கு வந்திருக்கிறேன்.  ஜம்மு மற்றும் காஷ்மீரில் எங்களது பாதுகாப்பு படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட மோசம் நிறைந்த தீவிரவாத தாக்குதல் இதுவாகும். பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட மற்றும் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.  இந்த இயக்கத்திற்கு பாகிஸ்தான் நாடு வழங்கிய உரிமை மற்றும் பாதுகாப்பின் முடிவே தீவிரவாத தாக்குதல் என அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory