» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதலை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்: பிரதமர் மோடி

செவ்வாய் 26, பிப்ரவரி 2019 4:27:47 PM (IST)

பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு தலைவணங்குவதாக பிரதமர் மோடி, தெரிவித்தார். 

ராஜஸ்தானின் சுரு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு செயலையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். யாரிடமும் இந்தியா அடிபணியாது. எதற்காகவும் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டேன். இன்று காலை இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதலை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். 

விமானப்படைக்கு தலைவணங்குகிறேன். இன்று இந்தியாவின் அசாத்தியமான உள்ளங்களுக்கு  மரியாதை செலுத்தும் நாள் ஆகும்.இந்தியா மிகவும் பாதுகாப்பான கரங்களில் உள்ளது. மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.7.5 லட்சம் கோடி சேர்க்கப்படும்.  இதற்காக விவசாயிகள் எதுவும் செய்ய தேவையில்லை. அவர்களது செல்போனிற்கு கணக்கில் பணம் ஏறிவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவ்வாறு அவர் பேசினார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory