» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா நடத்திய தாக்குதலில் முக்கிய தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்: வெளியுறவுத்துறை செயலர்

செவ்வாய் 26, பிப்ரவரி 2019 12:54:08 PM (IST)

விமானப்படை தாக்குதலில் முக்கிய தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தான் மீது நடந்த விமானப்படை தாக்குதல் பற்றி இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் தந்தோம். பலமுறை தகவல் தந்தும் பயங்கரவாத முகாம்களை அழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பு மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மற்றொரு தாக்குதல் நடைபெறாமல் இருக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாலாகோட் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். விமானப்படையின் தாக்குதலில் பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார். ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய தீவிரவாதிகள் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டது என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory