» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஞாயிறு 24, பிப்ரவரி 2019 5:09:02 PM (IST)

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஓராண்டில் தலா ரூ.2,000 வீதம் 3 தவணையாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் இதன்மூலம் பயனடைவார்கள். இதற்காக மத்திய அரசு ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல் தவணையாக தலா ரூ.2,000 இன்று முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் போடப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இன்று நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு முதல் தவணையாக தலா ரூ.2000 வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.பின்னர் பேசிய மோடி, ”இது உங்களுடைய பணம். யாரும் இந்த பணத்தை உங்களிடம் இருந்து எடுத்துக்கொள்ள முடியாது. இந்த திட்டத்தில் நடுத்தரகர்கள் யாரும் இல்லை” என்று விவசாயிகளிடம் கூறினார். விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன்சிங், நிதித்துறை இணை அமைச்சர் சிவ்பிரதாப் சுக்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர், "இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள், கோரக்பூரில் பிரதமரின் கிசான் சம்மான் நிதி  விவசாயிகள் உதவி தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறேன். இந்த திட்டம் நாட்டுக்கே உணவு வழங்கும் கோடிக்கணக்கான கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு பயனளிக்கும். பிப்ரவரி 1ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் ஒரே மாதத்தில் செயல் வடிவம் பெறுகிறது. இது புதிய இந்தியாவின் புதிய கலாச்சாரம்” என்று புகழாரம் சூட்டியுள்ளார். 


மக்கள் கருத்து

ஒருவன்Feb 26, 2019 - 08:02:44 PM | Posted IP 162.1*****

அரசுப்பணத்தில் ஊர் சுற்றினாரே அதே மாதிரி தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் அள்ளி வீசுவார் . மற்ற நேரத்தில் நம்மை தூக்கி வீசுவார்

தமிழன்-Feb 25, 2019 - 06:39:27 PM | Posted IP 162.1*****

இவருக்கு எப்போ தூக்கம் கலைந்தது.. ? ஒரே பணமா அல்லி வீசுறாரு.. கருப்பு பணமும் கொண்டுவரல.. எங்க இருந்து பணம் வழங்குகிறார்.. ஆட்டயப்போட்டதில் இருந்தா??.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory