» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

சனி 16, பிப்ரவரி 2019 10:31:04 AM (IST)

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துது. 
 
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பின்னர் கஜா புயல் நிவாரண பணிகளை காரணம்காட்டி அத்தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் நிலைமை சீராக தொடங்கிவிட்டது. 

அதேபோல திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம்காட்டி நிறுத்தப்பட்டது. எனவே, இந்த இரு தொகுதிகளிலும் உடனடியாக இடைத்தேர்தலை அறிவிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. மனுதாரர் கே.கே.ரமேஷ் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜராகி வாதாடினார்.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், திருவாரூர் இடைத்தேர்தல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் ஐகோர்ட்டு தேர்தல் நடத்துவது குறித்து தடை ஏதும் விதிக்கவில்லை என்றால் உடனடியாக தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory