» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கட்சி விளம்பரங்களால் தொல்லை என வழக்கு : பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 11, ஜனவரி 2019 7:58:31 PM (IST)

கட்சிகள் பொது இடங்களில் விளம்பரப் பதாகைகள் அமைப்பதை தடை செய்யக் கோரிய வழக்கில் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களின் போதும் தேர்தல் பிரச்சாரத்தின்போது பொது இடங்களில் பிரம்மாண்டமான விளம்பர பதாகைகளை அமைக்கின்றனர். இதுபோன்ற விளம்பரங்களைச் செய்ய கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மலைப்பகுதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்களில் அரசியல் கட்சிகள் விளம்பர செய்ய தடை போட வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக மத்திய மற்றும் தமிழக அரசுகளும் தேர்தல் ஆணையமும் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு 6 வாரங்கள் அவகாசம் அளித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory