» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் செயலாளர் குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 5, டிசம்பர் 2018 5:39:53 PM (IST)

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் இரண்டு அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேற்கு வங்கத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் இரு பிரிவுகளை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் 5 பேர் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்ற விகாஸ் மெட்டல்ஸ் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனம் (விஎம்பிஎல்) மீது டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

நீதிபதி பரத் பராஷர் முன் நடந்த இந்த விசாரணையின் முடிவில் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் குற்றவாளிகளுக்கான தண்டனை தொடர்பான வாதம் நடைபெற்றது. அப்போது, குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதிக அளவில் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. தரப்பு கோர்ட்டில் வாதிட்டது. 70 வயது குப்தாவுக்கு பல்வேறு நோய்கள் இருப்பதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அவரது வக்கீல் கோரிக்கை விடுத்தார். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா, மற்ற இரண்டு அதிகாரிகளான கே.எஸ்.கிரோபா, கே.சி.சம்ரியா ஆகியோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மற்ற குற்றவாளிகளான விஎம்பிஎல் நிறுவன நிர்வாக இயக்குனர் விகாஸ் பன்டி, நிறுவனத்தின் சார்பில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட அதிகாரி ஆனந்த் மாலிக் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. விஎம்பிஎல் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory