» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐஜி பொன்.மாணிக்கவேல் நியமனத்தை ரத்து செய்யக்கோாி தமிழக அரசு மேல்முறையீடு

செவ்வாய் 4, டிசம்பர் 2018 8:23:13 PM (IST)

பொன் மாணிக்கவேலை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாாியாக நியமனம் செய்ததை ரத்து செய்யக்கோாி தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஐஜி பொன் மாணிக்கவேலை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாாியாக நியமனம் செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சிலைக்கடத்தல் தொடா்பான வழக்குகளை பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் போது பல முக்கிய புள்ளிகளின் பெயா்கள் அடிபட்டன. இதனைத் தொடா்ந்து ஐஜி பொன் மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை. அவா் பணி நிமித்தமான எந்தவொரு அறிக்கையையும் தமிழக அரசிடம் வழங்குவது கிடையாது எனவே அவரை மாற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடா்ந்தது. ஆனால் தமிழக அரசின் கோாிக்கையை உயா்நீதிமன்றம் நிராகரித்தது. 

அதன் பின்னா் சிலைக்கடத்தல் தொடா்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த வழக்கின் மீது கடந்த 30ம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. அப்போது தமிழக அரசின் ஆணையை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் அன்றைய தினமே பொன் மாணிக்கவேல் பணி நிறைவு பெற்ற நிலையில் அவரை மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனிடையே தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் 2 மேல்முறையீட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பொன் மாணிக்கவேலை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாாியாக நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். மேலும் அவருக்கு மேலும் ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு செய்ததையும் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சாா்பில் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 


மக்கள் கருத்து

தமிழன்Dec 5, 2018 - 12:44:57 PM | Posted IP 162.1*****

எதற்காக நேர்மையாக செயல்படும் திரு பொன்மணிக்கவேல் அவர்களை இப்பொறுப்பில் இருந்து நீக்க அரசு தீவிரம் காட்டுகிறது??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory