» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கோத்ரா கலவரம்: மோடி மீதான வழக்கில் அடுத்த மாதம் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 4, டிசம்பர் 2018 9:04:43 AM (IST)
கோத்ரா கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கின் விசாரணையை ஜனவரி 3வது வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இது குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, இந்த கலவரத்தில் குஜராத்தின் அப்போதைய முதல்வர் மோடி உட்பட 63 பேர் மீது எந்த குற்றமும் இல்லை என கடந்த 2012ம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்து இந்த வழக்கை முடித்தது. இதை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதை எதிர்த்து ஜாப்ரியின் மனைவி ஷகியா தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து இசான் ஜாப்ரியின் மனைவி ஷகியா ஜாப்ரி, குஜராத் உயர்மன்றத்தில் மனு செய்தார். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு சரி என குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு கூறியது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணை நடந்தது. அப்போது இது குறித்து சமூக ஆர்வர் டீஸ்டா செதால்வத் என்பவரும் மனு செய்துள்ளார். அவரை இரண்டாவது மனுதாரராக இந்த வழக்கில் சேர்க்கிறோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. சிறப்பு புலனாய்வு குழு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகில் ரோத்தகி, ‘‘ஷகியாவின் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை’’ என்றார். டீஸ்டாவை 2வது மனுதாரராக சேர்ப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இவர்களின் கோரிக்கை ஆதரவாக எந்த ஆவணங்களும் இணைக்கப்படவில்லை’’ என்றார்.
ஷகியாவின் வக்கீல் சி.யு.சிங் வாதிடுகையில், ‘‘எஸ்.ஐடி அறிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது சரி என உயர் நீதிமன்றம் தவறாக உத்தரவு பிறப்பித்துள்ளது’’ என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கன்வில்கர், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 3வது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உத்தரபிரதேச அரசின் பசு பாதுகாப்பு பிரசார தூதராக நடிகை ஹேமமாலினி நியமனம்
சனி 23, பிப்ரவரி 2019 4:56:28 PM (IST)

வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து விவாதம் நடத்த மோடி தயாரா?: ராகுல் சவால்
சனி 23, பிப்ரவரி 2019 3:50:30 PM (IST)

பெங்களூரில் ஏரோ இந்தியா கண்காட்சியில் தீ விபத்து : 100 கார்கள் சேதம்
சனி 23, பிப்ரவரி 2019 2:15:01 PM (IST)

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் உறுதி
சனி 23, பிப்ரவரி 2019 8:45:45 AM (IST)

புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் : காங்கிரஸ் சாடல்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:20:04 AM (IST)

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:09:19 AM (IST)
