» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நகை, பணத்திற்காக 7 பேரை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண்: தந்தை உட்பட 3பேர் கைது!

புதன் 21, நவம்பர் 2018 11:53:05 AM (IST)

ஆந்திர மாநிலத்தில் 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண் மற்றும் அவரது தந்தை உட்பட 3 பேரை கடப்பா போலீசார் கைது செய்துள்ளனர். 

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கித்தலூரை சேர்ந்தவர் ஆனந்தா ரெட்டி. இவர், தன் மகள் மோனிகாவை, ராமகிருஷ்ணா ரெட்டி என்பவருடன் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்த சிறிது நாட்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுள்ளார். 

இந்நிலையில் ராமகிருஷ்ணா ரெட்டி, தன்னிடமிருந்த பணம், நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திட்டமிட்டு பறித்துசென்றதாக கடப்பா போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோனிகாவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன. மோனிகாவும், அவரது தந்தை ஆனந்த ரெட்டி மற்றும் நண்பர் சண்டி ஆகியோருடன் இணைந்து பணக்கார ஆண்களை சந்தித்து அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. 

அவ்வாறு திருமணம் செய்துகொண்ட சிறிது நாட்களிலேயே அவர்களிடமிருந்து பணம், நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பெற்றுக்கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது போல் பிரிந்து செல்வது இவரது வழக்கம். அவ்வாறு, இதுவரை ஏழு பேரை, பணம் மற்றும் நகைக்காக திருமணம் செய்து மோனிகா ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரது தந்தை ஆனந்த ரெட்டி அவரது நண்பர் சண்டி ஆகிய மூவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory