» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய 539 பெண்கள் விண்ணப்பம்: ஆன்லைனில் முன்பதிவு

வெள்ளி 9, நவம்பர் 2018 4:30:20 PM (IST)

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில்   539 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர்

சபரிமலை ஐயப்பனை தரிசிக்கும் போது கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை சபரிமலை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. இதில், வரும் கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க சுமார் 3 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், 10 முதல் 50 வயதுடைய பெண்களையும் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கோயிலில் தரிசனம் செய்ய வரும் பெண்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 3,505 பேர் கைது செய்யப்பட்டு 529 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், ஆன்லைனில் 539 பெண் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory