» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: 12 பேர் கவலைக்கிடம்

திங்கள் 22, அக்டோபர் 2018 7:45:59 PM (IST)

ஆந்திர மாநிலம், சித்தூரில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 12 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சித்தூர் மாவட்டம், வரதய்யபாளையம் அருகே உள்ளது களத்தூர் கிராமம். அக்கிராமத்தில் இருக்கும் வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று இரவு திருவிழா நடைபெற்றது. அப்போது அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக பொங்கல், சுண்டல் வழங்கப்பட்டன. பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் சிலருக்கு சற்று நேரத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் சுமார் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, கிராம மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அங்கு ஆம்புலன்சில் 80 பேரும் ஏற்றப்பட்டு வரதய்யபாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory