» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1000 கோடி: மத்திய அரசு வழங்கியது

வெள்ளி 19, அக்டோபர் 2018 10:39:45 AM (IST)

ஏர்இந்தியா நிறுவனத்திற்கு தேசிய சிறுசேமிப்பு நிதியத்தின் மூலம் செலுத்து மூலதனமாக ரூ.1000 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. 

இது குறித்து ஏர்இந்திய நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: எண்ணெய் நிறுவனங்களுக்கு, எரிபொருள் நிலுவைத் தொகையாக ஏர்இந்தியா குழுமம் 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதனால் எரிபொருள் விநியோகத்தை நிறுத்த நேரிடும் என இம்மாத தொடக்கத்தில் எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்திருந்தன. 

இதையடுத்து ஏர்இந்தியா நிதிநிலையை மேம்படுத்த ரூ.2 ஆயிரத்து 121 கோடி செலுத்து மூலதனமாக அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், ஏர்இந்தியா நிறுவனத்திற்கு தேசிய சிறுசேமிப்பு நிதியத்தின் மூலம் செலுத்து மூலதனமாக ரூ.1000 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம், ஏர்இந்தியா நிறுவனத்தின் நிதிநிலை சற்றே மேம்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரத்தில் ரூ.500 கோடி கடனாக திரட்ட உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory