» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விமானத்தில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த பயணி கைது

வெள்ளி 19, அக்டோபர் 2018 10:26:55 AM (IST)

மும்பையில், விமானத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவைச் சேர்ந்த ராஜு கங்கப்பா (28). மும்பையில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை பெங்களூருக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது விமான பெண் ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக விமானத்தில் இருந்து மற்ற ஊழியர்களிடம் சென்ற நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதையடுத்து மும்பை விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஊழியர்கள் தகவல் அளித்துள்ளனர். 

இதையடுத்து தொழிலக பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விமானத்தில் ஏறி ராஜுவை அவரது உடமைகளுடன் கீழே இறக்கியுள்ளனர். பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதையடுத்து ராஜு மும்பை விமான நிலை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் ஐபிசி 354வது பிரிவின் கீழ் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது, இழுக்கு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory