» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒடிசா மாநிலத்தில் டிட்லி புயல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 57-ஆக அதிகரிப்பு

வெள்ளி 19, அக்டோபர் 2018 8:36:42 AM (IST)ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே கடந்த 11-ஆம் தேதி கரையைக் கடந்தது. மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயல் காரணமாக வட ஆந்திரா மற்றும் ஒடிசாவின் 5 கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. 

இதனால் மொத்தம் 17 மாவட்டங்களில் உள்ள 8,125 கிராமங்களைச் சேர்ந்த 60.11 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 2.73 லட்சம் ஹெக்டோர் அளவிலான பயிர்கள் நாசமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory