» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய இருந்த பெண் பத்திரிகையாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு

வியாழன் 18, அக்டோபர் 2018 1:27:36 PM (IST)

ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய இருந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையைச் சேர்ந்த இரண்டு பெண் நிருபர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். 

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா உள்பட நாடெங்கிலும் உள்ள ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று மாலை ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு நேற்று கோயிலுக்குச் செல்வோம் என்று தேசிய அளவிலும் இருந்து புறப்பட்ட பல பெண்களும் நிலக்கல் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இன்று பத்தனம்திட்டா பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இன்று காலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளரும், டெல்லியைச் சேர்ந்தவருமான சுஹாசினி ராஜ் என்பவர் வெளிநாட்டைச் சேர்ந்த தனது சக பத்திரிக்கையாளருடன் சபரிமலை சென்றார். இவர்கள் இருவரும் பம்பை நுழைவு வாயிலுக்குள் செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். மலையேற இருந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். போராட்டக்காரர்கள் இவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினர். 


மக்கள் கருத்து

ஸ்.சிவராமன்.Oct 18, 2018 - 05:59:49 PM | Posted IP 162.1*****

அப்படி.கொஞ்சம் பள்ளிவாசல்.வரைக்கும் போயிவிட்டு வா வரமாட்டாய்

ஸ்.சிவராமன்.Oct 18, 2018 - 05:56:26 PM | Posted IP 172.6*****

கடவுளுக்கு.வந்த.சோதனை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory