» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலைக்குள் நுழையும் பெண்கள் இரண்டாக பிளக்கப்படுவார்கள் : நடிகர் சர்ச்சை பேச்சு

வெள்ளி 12, அக்டோபர் 2018 7:01:59 PM (IST)

சபரிமலைக்குள் நுழையும் பெண்கள் இரண்டாக பிளக்கப்பட்டு, ஒரு பகுதி டெல்லியிலும் மற்றொரு பகுதி முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்திலும் வீசப்படுவார்கள் என்று நடிகர் கொல்லம் துளசி பேசியது பரபரப்பை ஏற்படத்தியு்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும் அதே சமயத்தில் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பின. தீர்ப்புக்கு எதிராக கேரளா மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. கொல்லத்தில் இன்று நடந்த போராட்டத்தில் பந்தளம் அரச குடும்பத்து உறுப்பினர்கள், பாஜக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர் கொல்லம் துளசி, சபரிமலைக்குள் நுழையும் பெண்கள் இரண்டாக பிளக்கப்பட்டு, ஒரு பகுதி டெல்லியிலும் மற்றொரு பகுதி முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்திலும் வீசப்படுவார்கள் என பேசினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory