» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் பிரான்ஸ் பயணம் ஏன்?: ராகுல் காந்தி கேள்வி

வியாழன் 11, அக்டோபர் 2018 3:43:23 PM (IST)

 "பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளது ஏன்?” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்கு திடீரென பயணம் மேற்கொள்வதற்கான காரணம் என்ன?,  ரஃபேல் விமான ஆலையை பார்வையிட வேண்டிய அவசர தேவை என்ன? 

நீதிமன்றம் கேட்டுள்ள விளக்கங்களுக்கு இனிமேல்தான் காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. பிரதமரின் முடிவை நியாயப்படுத்தவே நிர்மலா சீதாராமன் அவசரமாக பிரான்ஸ் சென்றுள்ளார். இந்திய அரசு விரும்புவதையே டசால்ட் நிறுவனம் கூறும்; ரஃபேல் போன்ற பெரிய ஒப்பந்தத்தை இழக்க விரும்ப மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விவரங்களை, மூடி முத்திரையிட்ட 3 தனித்தனி உறைகளில் வைத்து, வரும் 29-ஆம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து. இந்நிலையில், மீடியா பார்ட் பத்திரிகை வெளியிட்ட தகவலுக்கு டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய பங்குதாரராக சுதந்திரமாகவே தேர்வு செய்தோம். பங்குதாரர் விவகாரத்தில் எங்களுக்கு எந்த கட்டாயமும் கொடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory