» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரபேல் ஒப்பந்த நடைமுறைகள் தொடர்பாக மத்திய அரசு அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதன் 10, அக்டோபர் 2018 5:19:41 PM (IST)

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த ஒப்பந்த நடைமுறைகள் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசு மறுத்து வரும் நிலையில், ரபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ரபேர் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என எம்எல் சர்மா கூறியிருந்தார். 

இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ரபேல் போர் விமானங்களை சராசரி விலையை விட கூடுதல் விலைக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக மனுதாரர் வாதாடினார். ஆனால் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டியதில்லை என்றும், ராணுவ ரகசியம் சார்ந்த விஷயம் என்பதால் இதை விசாரிக்கக்கூடாது என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதாவது ரபேல் தொடர்பாக முடிவெடுக்கும் நடைமுறைகள் தொடர்பான அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory