» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயில்வேயில் பணியாற்றும் 12 லட்சம் ஊழியர்களுக்கு ரூ.2044 கோடி போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதன் 10, அக்டோபர் 2018 4:58:56 PM (IST)

இந்திய ரயில்வேயில் பணியாற்றும் 12 லட்சம் ஊழியர்கள்ளுக்கு ரூ.2044 கோடி போனஸ் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

தில்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. அதற்குப் பின்னர் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய ரயில்வேயில் பணியாற்றும் 11.91 லட்சம்  நான் கெசட்டட் (அரசிதழ் பதிவில் வராத)   ஊழியர்களுக்கு ரூ.2044 கோடி போனஸ் வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 78 நாள் ஊதியமாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி இந்தப் பிரிவின்  கீழ் வரும் ஒவ்வொருவருக்கும் ரூ. 17951 ஊக்கத் தொகையாக கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.      


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory