» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உ.பி.யில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 7 பேர் பலி; 25க்கும் மேற்பட்டோர் காயம்

புதன் 10, அக்டோபர் 2018 10:30:40 AM (IST)



உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே டெல்லி நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

மேற்குவங்க மாநிலம் மால்டாவில் இருந்து டெல்லி நோக்கி நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டம் ஹர்சந்த்பூர் ரயில் நிலையம் அருகே அந்த ரயில் வந்து கொண்டிருந்தபோது இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 6 பெட்டிகள் அடுத்தடுத்து தடம் புரண்டு கவிழ்ந்தன. இதனால் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் உருண்டு விழுந்தனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

லக்னோ, வாரணாசியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் அங்கு விரைந்தனர். அதிகாலை நேரம் என்பதால் பலர் தூக்கத்தில் இருந்துள்ளனர். விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தர்வர்கள் ரேபரேலி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைககிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory