» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திரா, ஒடிசா மாநிலங்கள் வழியாக கடக்கவுள்ள புதிய டிட்லி புயல் : அரசு எச்சரிக்கை

செவ்வாய் 9, அக்டோபர் 2018 7:28:29 PM (IST)

ஆந்திரா, ஒடிசா வழியாக கடக்கவுள்ள புதிய புயலுக்கு டிட்லி என்று பெயரிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு டிட்லி என்று வானிலை ஆய்வு மையம் பெயரிட்டுள்ளது. அடுத்த ஆறு மணி நேரத்துக்குள் டிட்லி புயல், ஆந்திரா ஓடிசா வழியாக இந்தியாவை கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 10 கிமீ வேகம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் விளைவாக அடுத்த 24 மணி நேரத்துக்தில் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் பெரும் புயல் வீசும் என்றும் அக்டோபர் 11ம் தேதியன்று ஆந்திரா துறைமுகம் கோபால்பூர் மற்றும் கலிங்கப்பட்டினத்தை கடந்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory