» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரசியலுக்காக மின்வெட்டு இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகள் : அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 1:09:17 PM (IST)

எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவே தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதாக பேசி வருகிறார்கள் என டெல்லியில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி பேட்டியின் போது கூறினார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது, தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது.தமிழகத்தில் மின்வெட்டு என எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவே தவறான பிரசாரம் செய்து வருகின்றனர்.  மழை காரணமாக மின்தேவை குறைந்திருப்பதால் மின்உற்பத்தியையும் குறைத்திருக்கிறோம். * நிலக்கரி கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம், தினமும் நிலக்கரி அனுப்புவதாக மத்திய அரசு கூறியுள்ளது. வடசென்னையில் 3 நாட்களுக்கான நிலக்கரியும், தூத்துக்குடியில் 6 நாட்களுக்கான நிலக்கரியும் கையிருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory